உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் முறையாக கூடவுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நிதியமைச்சில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் செயலணி ஒன்றினை ஜனாதிபதி அண்மையில் நியமித்திருந்தார்.
அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்கு விரைவுபடுத்துவதற்கு முறையான பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனை ஒழுங்குபடுத்துவதும், மேற்பார்வை செய்வதுமே புதிய செயலணியின் பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.