கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் நடைபெறவுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேநேரம் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வருகை தந்த நிலையில், மாணவர்களின் போராட்டம் கலவரமாக மாறியது. இதனையடுத்து பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு பின்னர் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.