வடகிழக்கு ஆர்காம் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 8 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாலி ராணுவம் தெரிவித்துள்ளது.
மாலியில் இருந்து தங்கள் படைகளை திரும்பப் பெறுவதாக பிரான்ஸும் அதன் நட்பு நாடுகளும் கூறிய சில நாட்களுக்குப் பின்னர் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சமீபத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாலி விமானப்படை தீவிரவாதிகள் 57 பேரை கொன்றுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு துருப்புக்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாலியின் பாதுகாப்பு குறித்து பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் கவலைகள் வெளியிடப்பட்டன.
ஐ.எஸ். போராளிகள் குழுக்கள் செயல்படும் ஆர்காமின் பகுதியில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.