• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்கள் எனக்கு வழங்கிய மிகப்பெரிய ஆணைக்கு செயல் வடிவில் நன்றி கூறி வருகிறேன் – அங்கஜன்

shagan by shagan
2022/02/21
in இலங்கை
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த  நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எனக்கு வழங்கிய மிகப்பெரிய ஆணைக்கு செயல் வடிவில் நன்றி கூறி வருகிறேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினரும்-மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டு நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

யாழ் மக்கள் எமக்களித்த அன்புக்கும்-அரவணைப்பிற்கும் தலை வணங்கவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு வந்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட்ட காலத்திற்குள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.

அன்று எனக்கு ஜனாதிபதி அவர்கள் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்ல ஒரு வாய்ப்பினையும்-அதனூடாக 5மாத காலம் ஓர் அமைச்சுப் பதவியும் தந்து ஊக்குவித்தமை தான் இன்று நான் தொடர்ந்தும் மக்கள் பணியாற்றி வர பிரதான காரணம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் யாழ் மாவட்டத்திற்கு 21தடவைகள் விஜயம் மேற்கொண்டு யாழ் மக்களின் விவசாயம்,காணி விடுவிப்பு ,நல்லிணக்கம்,இன ஒற்றுமை உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார். அதுதான் இன்றும் சுதந்திரக்கட்சியை யாழில் வழிநடத்திச் செல்ல மிகப்பெரிய தூணாக விளங்குகிறது.

வரலாற்றில் முதல் தடவையாக யாழ் மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஓர் ஆசனத்தை தந்து மிகப்பெரிய ஆதரவைத் தந்துள்ளனர்.இந்த மண்ணின் மகிமை உலகிற்கே தெரியும்.அந்த மண் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாக மிகப்பெரிய வாய்ப்பினைத் தந்துள்ளது.

எமக்கு எதிரானவர்கள் சொல்வது போன்று சுதந்திரக்கட்சி ஓர் சிங்களக் கட்சி அல்ல.இது ஓர் தேசியக் கட்சி.சர்வ இனங்கள்,சர்வ மதங்களையும் ஒன்றுபடுத்திய கட்சி.

குறிப்பாக சிறுபான்மையினரின் தமிழர்களின் அபிலாசைகளையும் உள்வாங்கிக் கொண்டு சுதந்திரக்கட்சி நிலைத்து நிற்கிறது.அதுவே கடந்த தேர்தலில் யாழ் மக்கள் எனக்கு மிகப்பெரிய ஆணையை வழங்க காரணம்.

இந்த ஆணையை வழங்கிய மக்களுக்கு மிகப்பெரிய நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.அந்த நன்றியை 18மாத காலமாக செயல் வடிவில் ஆற்றிய வருகிறேன்.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளராக பல பரினாமங்களைப் பெற்று 18மாத காலத்திற்குள் யாழ் மாவட்டத்தில் 3500க்கும் மேற்பட்ட வீட்டுத்திட்டங்கள்,கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த 793 நிறைவான கிராமம் வேலைத்திட்டங்கள்,16சௌபாக்கியா உற்பத்திக் கிராம வேலைத்திட்டங்கள்,450கிராமிய வீதிகள் புனரமைப்பு அதனை விட மாகாணசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதிகள் என பல அபிவிருத்திகளை நிறைவு செய்துள்ளோம்.

அதையும் தாண்டி வாழ்வாதாரம் இன்று மிகப்பெரிய சவாலாக உள்ளது.இன்னமும் யாழ் மாவட்டம் வறுமையில் எட்டாவது மாவட்டமாக உள்ளது.இந்த மாவட்டத்தை வறுமையில் இருந்து மீட்டெடுத்து பொருளாதார ரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.அதனூடாக இழந்த அனைத்தையும் மீளப் பெற்று எமது இலக்கினை அடைய முடியும்.என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை”

Next Post

ரி-20: மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்தது இந்தியா அணி!

Related Posts

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !
இலங்கை

2026-03-17
மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!
இலங்கை

🔴update- வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய!

2026-03-17
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமாக மாங்காடு கிராமம் அங்குரார்ப்பணம்!
இலங்கை

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமாக மாங்காடு கிராமம் அங்குரார்ப்பணம்!

2026-03-17
Next Post
ரி-20: மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்தது இந்தியா அணி!

ரி-20: மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்தது இந்தியா அணி!

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் நோர்வே தொடர்ந்தும் முதலிடத்தில் ஆதிக்கம்!

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சர்வதேச எல்லையை திறக்கும் அவுஸ்ரேலியா!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

0
மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

0
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

0
தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

0
கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

0
மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

2026-03-17
மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

2026-03-17
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

2026-03-17
கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

2026-03-17
தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

2026-03-17

Recent News

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

2026-03-17
மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

2026-03-17
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

2026-03-17
கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.