சில அரசியல்வாதிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அவதானிக்கும் போது அமைச்சர்கள் தமது அரசியல் அதிகாரத்தை பலப்படுத்த முயற்சிக்கின்றனர் என்பது தெளிவாகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான முரண்பாடுகள் மக்களுக்குச் சிறந்த சேவை செய்வதற்கான நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டதல்ல என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் தனிநபர்களின் அரசியல் நலன்கலூக்காக சில விடயங்களை செய்வதை தவிர்த்து நாட்டின் நலனுக்காக உழைக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு இடையில் முரண்பாடுகள் மாத்திரமன்றி அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டுமென ரோஹன ஹெட்டியாராச்சி அழைப்பு விடுத்தார்.