அமைச்சுக்கள் சிலவற்றின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட கட்டமைப்புகளை விபரிக்கும் வகையில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.