உக்ரைன் மீதான படையெடுப்பு குறித்து விளக்குவதற்காக, ரஷ்ய தூதருக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்யாவின் சட்ட விரோதமான, தூண்டுதலின்றி உக்ரைன் மீதான படையெடுப்பு குறித்து விளக்க பிரித்தானியாவில் உள்ள ரஷ்யாவின் தூதரை வரவழைத்ததாக வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘நாங்கள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்போம் மற்றும் உக்ரைனுக்கு ஆதரவாக நாடுகளைத் திரட்டுவோம்’ என்று டிரஸ் ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று பின்னர் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை அறிவிப்பார் மற்றும் பின்னர் ஒரு தொலைக்காட்சி அறிக்கையை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே உக்ரைனில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் மாநில விமானப் போக்குவரத்து சேவைகள், நாடு தாக்குதலுக்கு உள்ளானதால், நாட்டின் வான்வெளியை மூடியுள்ளது.
இதனால், சிவில் விமானப் போக்குவரத்துக்கான விமானப் பாதுகாப்பின் அதிக ஆபத்து காரணமாக, இது அனைத்து விமானங்களையும் 02:45 கீவ் நேரத்தில் நிறுத்தியது.