ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதில் இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான பணத்தை பெற்றுக்கொள்வதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் அதன் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட குறிப்பிட்டுள்ளார்.
2021 இல் ரஷ்யாவிற்கு 29 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஈராக் மற்றும் துருக்கிக்கு அடுத்தபடியாக இலங்கையிலிருந்து தேயிலை ஏற்றுமதி செய்யப்படும் மூன்றாவது பெரிய நாடாக ரஷ்யா காணப்படுகின்றது.
இதேவேளை, ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளமையினால், சர்வதேச வங்கிகளைக் கையாள்வதில் ரஷ்யா பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.