உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 219 பேரை மீட்ட முதல் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்துள்ள, நிலையில் 250 பேருடன் இரண்டாவது விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்துள்ளது.
ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதைடுத்து உக்ரைன் அரசாங்கம் தனது வான் எல்லைகளை மூடியுள்ளது.
இதன்காரணமாக அயல் நாடுகள் வழியாக உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்க தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வீதி மார்க்கமாக உக்ரைன் – ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள், அதிகாரிகள் மூலம் ருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மத்திய அரசு இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஒப்ரேசன் கங்கா என பெயரிட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்தியர்கள் 219 பேருடன் புறப்பட்ட விமானம் நேற்றிரவு மும்பை விமான நிலையம் வந்தடைந்தது.
இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக தமிழக மாணவர்கள் 5 பேர் உள்பட 250 இந்தியர்களுடன் மற்றொரு விமானம் ருமேனியாவின் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை டெல்லி வந்டைந்துள்ளது.
தாயகம் திரும்பிய இந்தியர்களை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா வரவேற்று கலந்துரையாடியுள்ளார்.