இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் குறைந்தது 10 இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியான ஐக்கிய அரபு இராச்சியம் 60 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு வர்த்தகத்தைப் புதுப்பிக்க புதுடில்லியுடன் இணைந்து செயல்படவுள்ளது.
பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல்-மரி மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டஈ மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘சில சம்பிரதாயங்கள் முடிக்கப்பட உள்ளன, அவை அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும்’ எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், ஐக்கிய இராச்சியத்துடனான ஒப்பந்தத்தினை செயற்படுத்துவதற்கு குறைந்தது 60 நாட்களாக வேண்டும், அதன் பிறகு, மே முதல் வாரத்தில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கிறோம்.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடர்ச்சியான வணிக வட்டமேசைகள் நடத்துவதற்கு முன்மொழிந்துள்ளதோடு ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சர்களும் அதற்காக அழைக்கப்பட்டுள்ளனர் என்று கோயல் மேலும் கூறினார்.
இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க ஆதாயம் கிடைக்கும் என்ற காரணத்தினாலர் ஐக்கிய இராச்சியத்துடனான உடன்படிக்கையில் முதல் முறையாக கையொப்பமிட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில்; இந்தியாவிற்கான சந்தை அங்கீகாரங்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்துடனான இந்த ஒப்பந்தம் நிரந்தர பாதுகாப்பு பொறிமுறையையும் கொண்டுள்ளது. இது இறக்குமதியில் திடீர் எழுச்சி ஏற்பட்டாலும் அதற்கான பாதுகாப்பு உத்திகள் காணப்படுகின்றன.
அத்துடன், இந்த ஒப்பந்தமானது, இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சமநிலையான, முழுமையான மற்றும் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை கொண்டது என விவரித்த அமைச்சர் கோயல், இது தடையற்ற வர்த்தகம் முதல் டிஜிட்டல் பொருளாதாரம், அரசாங்க கொள்முதல், பிறப்பிட விதிகள், சுங்க நடைமுறைகள், அரசாங்க கொள்முதல், அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் மின் வணிகம். ஆடை உற்பத்தி, கைத்தறி, நகைகள், தோல் பொருட்கள் போன்ற துறைகளுக்கு பயனளிக்கிறது என்றும் கூறினார்.
இதனைவிடவும், ‘புதிய எல்லைகள், புதிய மைல்கற்கள்’ ஐக்கிய இராச்சியத்துடனான வர்த்தக ஒப்பந்த்தில் கையொப்பமிட்டதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடிஜி, இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையும், அதிக நன்மைக்கான செயல்களையும் நிரூபித்துள்ளார்.
இரு தரப்பினரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கவும், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஈடுபாட்டை தீவிரப்படுத்தவும், உதவுகின்றது’என்று பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.