பாகிஸ்தானின் ‘அவுரத் மார்ச்’ போராட்டக்காரர்கள், ஹிஜாப் தொடர்பாக இந்தியாவை விமர்சிக்கும் பாகிஸ்தான் பல பெண்கள் பொது இடங்களில் என்ன அணிய வேண்டும் என்பதில் அவநம்பிக்கையுடன் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளனர்.
‘முஸ்கானின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்’ என்று குரல் கொடுக்கும் பாகிஸ்தானிய ஆண்கள், பாகிஸ்தானில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது குரல் எழுப்ப முயற்சிக்க வேண்டும் என தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
இந்த பாகிஸ்தானிய ஆண்கள் பெண்கள் அணியும் ஆடைகள் அவர்களின் ‘கண்ணியம்’ பற்றிய கருத்துகளுக்கு ஒத்துப்போகிறதா இல்லையா என்பதை வெளிப்படையாக வாதிடுகின்றனர்.
ஆனால் பாகிஸ்தானில் பெண்கள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கோரி ஊர்வலம் நடத்துகிறார்கள், எனினும் அதுபற்றி எவ்விதமான பதிலளிப்புக்களும் செய்யப்படுவதில்லை.
பாகிஸ்தானில் உள்ள மத சிறுபான்மையினர் மற்றும் பெண்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு பாக்கிஸ்தான் பதிலளிக்காது இருக்கும் நிலையில் ஏனைய நாடுகளை விமர்சிப்பது பொருத்தமற்றதாகும்.
பாகிஸ்தானில் உள்ள பெண்கள் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறவிருக்கும் ‘அவுரத் மார்ச்’ போராட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில், இம்ரான் கான் அரசாங்கம் பழமைவாதத்தை ஊக்குவிப்பதற்காக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று பாகிஸ்தானிய பெண்களால் நடத்தப்படும் ‘அவுரத் மார்ச்’ போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக பாகிஸ்தானின் மத விவகார அமைச்சர் நூருல் ஹக் காத்ரி, மார்ச் 8 ஆம் திகதியை சர்வதேச ஹிஜாப் தினமாக அறிவிக்குமாறு பிரதமர் இம்ரான் கானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ‘அவுரத் மார்ச’ இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்று அமைச்சர் கூறியுள்ளதோடு, இம்ரான் கானுக்கு எழுதிய கடிதத்தில், பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சர்வதேச தினத்தின் நிலையை மாற்றுவதற்கான ஒரு பிற்போக்கு நடவடிக்கையையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.