15 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக டுபாய்க்கு கடத்த முற்பட்ட இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் இருவரும் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 490 கிராம் எடையுள்ள மூன்று தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.