இந்தியாவின் வலிமை அதிகரித்து வருதால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முடிந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியுள்ள நம் மக்களை மீட்க, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். இந்த பணியை விரைவுப்படுத்த நான்கு மத்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பியுள்ளேன்.
இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நம் நாட்டினரை பாதுகாப்பாக மீட்க முடிகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.