உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில், சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஸகாரோவா கூறுகையில், ‘பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும்.
உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்தப் போர் உக்ரைனின் இறையாண்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்’ என கூறினார்.
கடந்த மாதம் 24ஆம் திகதி உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை அறிவித்தபோது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் இதே கருத்தை தெரிவித்திருந்தார். உக்ரைனை ‘நாஜிக்களின் பிடியிலிருந்து’ விடுவிப்பதற்காகவே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அப்போது அவர் விளக்கபட் அளித்திருந்தார்.