சீனாவில் நடைபெற்றுவரும் பரா ஒலிம்பிக் தொடரில், சீனா தொடர்ந்தும் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
பத்து தங்க பதக்கங்கள், ஒன்பது வெண்கல பதக்கங்கள், 12 வெள்ளி பதக்கங்களுடன் மொத்தமாக 31 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
ஏழு தங்க பதக்கங்கள், இரண்டு வெண்கல பதக்கங்கள், ஏழு வெள்ளி பதக்கங்களுடன் மொத்தமாக 16 பதக்கங்களுடன் கனடா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆறு தங்க பதக்கங்கள், எட்டு வெண்கல பதக்கங்கள், ஐந்து வெள்ளி பதக்கங்களுடன் மொத்தமாக 19 பதக்கங்களுடன் உக்ரைன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நான்கு தங்க பதக்கங்கள், தலா ஒரு வெள்ளி, வெண்கல பதக்கம் என மொத்தமாக 6 பதக்கங்களுடன் பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது.
மூன்று தங்க பதக்கங்கள், ஒரு வெண்கல பதக்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களுடன் மொத்தமாக 6 பதக்கங்களுடன் ஜப்பான் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஸ்லோவோக்கியா, அமெரிக்கா, ஜேர்மனி, ஒஸ்திரியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன.