நாட்டில் நாளையும்(திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.