தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை நிராகரித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதாரச் சூழலைத் தீர்ப்பதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒரு பில்லியன் கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் தற்போது 600 மில்லியன் மட்டுமே கையிருப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் மொத்தக் கடன் 19 ஆயிரம் பில்லியன் என்றும் இந்தக் கடன்களைத் தீர்க்க வெளிநாட்டு நாணயத்தை நாம் கடனாகப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என கூறினார்.
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளது, உர உற்பத்தியில் ரஷ்யா முன்னணியில் உள்ள போதும் அங்கிருந்து வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு தற்போது காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படாவிடின் இலங்கை கிரீஸ் நாட்டைப் போன்ற நிலைக்குத் தள்ளப்படும் என ரணில் விக்ரமசிங்க எச்சரித்தார்.