இந்தியாவுடன் எல்லை வர்த்தகத்திற்கான இருநாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள மியன்மார் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு தகவல்தொடா்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சீனாவுடனும் தாய்லாந்துடனும் எல்லை வா்த்தகத்தை எளிமைப்படுத்துவதற்கான இருநாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம்.
இந்தியாவுடனும் அத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.