ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு போர் குற்றவாளி என்பதற்கு மிகவும் மிக வலுவான ஆதாரம் இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் விளாடிமிர் புடின் ஒரு போர் குற்றவாளி என கூறியிருந்த நிலையில், தற்போது அதே கருத்தினை பிரித்தானிய வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸூம் முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கும், விளாடிமிர் புட்டின் அவர்களுக்குப் பின்னால் இருந்ததற்கும் மிக மிக வலுவான ஆதாரங்கள் உள்ளன.
இந்தக் குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் பொறுப்புக் கூறப்படுவதை உறுதி செய்வதற்காக, பிரித்தானியா அந்த ஆதாரங்களை சேகரித்து வருகிறது’ என கூறினார்.