வரலாற்று சிறப்பு மிக்க விஜயத்தை மேற்கொண்டு சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளார்.
11 ஆண்டுகளுக்கு முன்பு சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர், சிரிய ஜனாதிபதி அரபு நாடொன்றிற்கு செல்லும் முதல் பயணமாக இது அமைந்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தை சென்றடைந்த சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத், பல செல்வாக்கு மிக்க மற்றும் சர்ச்சைக்குரிய ஆட்சியாளர்களை சந்தித்தார்.
அவர்கள் சிரியாவுடன் மீண்டும் உறவுகளை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அமெரிக்கா இந்த பயணத்தை விமர்சித்தது. இது ஆழ்ந்த ஏமாற்றம் என்று கூறியுள்ளது.
சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கிய டுபாயின் பில்லியனர் ஆட்சியாளர் ஷேக் முகமது அல் மக்தூதையும் அசாத் சந்தித்தார்.