உக்ரைன் -ரஷ்ய விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா நடுங்கும் நிலையில் இருப்பதாக விமர்சித்துள்ளார்.
வொஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ” நேட்டோ மற்றும் பசிபிக் நாடுகள் ஒருங்கிணைந்து இருக்கிறது. ஆனால் குவாட் அமைப்பில் இந்தியா சிலவற்றில் நடுங்கும் நிலை உள்ளது.
ஆனால் ஜப்பான் அதிக அளவில் எதிர்க்கிறது. அவுஸ்ரேலியாவும் அப்படித்தான் உள்ளது. புதின் நேட்டோவை பிரித்து விடலாம் என நினைக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள அதேநேரம் பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன.
ஐ.நா வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளன. இருப்பினும் இந்தியா வாக்கெடுப்பில் கலந்தகொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. அதேநேரம் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை கொள்வனவு செய்து வருகிறது. இந்த சூழலிலேயே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இவ்வாறு விமர்சித்துள்ளார்.