• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி திடீர் ஓய்வு!

உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி திடீர் ஓய்வு!

Anoj by Anoj
2022/03/24
in டெனிஸ், விளையாட்டு
69 1
A A
0
31
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் முதல்நிலை வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டி, திடீரென ஓய்வுப் பெறுவதாக அறிவித்து விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இரட்டையர் பிரிவு போட்டியில் தனது முன்னாள் ஜோடியான கேசி டெலாக்யூவாவுடனான நேர்காணலில் ஓய்வை அறிவித்த 25 வயதான ஆஷ்லே பார்டி, இதுதொடர்பான 6 நிமிட காணொளியை தனது ‘இன்ஸ்டாகிராம்’ கணக்கில் பதிவிட்டுள்ளார்.

நடுக்கம் நிறைந்த குரலில், கண்ணீருடன் தனது ஓய்வுக் குறித்து அவர் கூறுகையில், ‘இந்தத் தருணத்தில் எனது இந்த முடிவு சரியானதென என் மனது சொல்கிறது. மற்ற கனவுகளை நோக்கி பயணிக்க இதுவே சரியான நேரம். டென்னிஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இனியும் என்னால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உத்வேகமாகச் செயல்பட இயலாது. தற்போது முதல் முறையாக இதை வெளிப்படையாகக் கூறுகிறேன். இது சற்று கடினமாகத் தான் இருக்கிறது.

கடந்த ஆண்டு வென்ற விம்பிள்டன் பட்டம், ஒரு விளையாட்டு வீராங்கனையாகவும், சாதாரண நபராகவும் எனக்குள் அதிக மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், விம்பிள்டன் வெல்வது எனது கனவாக இருந்தது. அதை வென்ற பிறகு அடைந்த திருப்தி ஒரு நிலையை எட்டியிருக்க, அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் ஆனதும் முழுமையாக திருப்தியாக உணர்ந்தேன்.

ஏற்கெனவே இவ்வாறு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறேன். ஆனால் இந்தத் தருணம் அதிலிருந்து வித்தியாசமானது. எனக்கான அனைத்தையும் கொடுத்த டென்னிஸ் விளையாட்டுக்காக நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்’ என கூறினார்.

டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஆஷ்லே பார்டி, ஓய்வை அறிவிப்பது இது முதல் முறையல்ல. 2011ஆம் ஆண்டு விம்பிள்டன் இளையோருக்கான சம்பியன் ஆகியிருந்த அவர், தனக்கிருந்த போட்டி அழுத்தம் காரணமாகவும், அதிகமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததாலும் 2014ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.

பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் தடம் பதித்து பிரபல பிக் பேஷ் லீக் போட்டிகளில் விளையாடி வந்தார். அதன் பிறகு மீண்டும் 2016ஆம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டுக்குத் திரும்பிய ஆஷ்லே பார்டி, அதில் முத்திரை பதிக்கத் தொடங்கினார். தற்போது டென்னிஸின் உச்சத்தில் இருக்கும்போது மீண்டும் ஓய்வை அறிவித்துள்ளார்.

வெற்றிகரமான டென்னிஸ் வீராங்கனையாக இருக்கும் தருணத்தில் இத்தகைய ஓய்வு முடிவை 25 வயதான ஆஷ்லே பார்டி மேற்கொண்டது, டென்னிஸ் உலகத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இறுதியாக நடப்பாண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்றதையடுத்து ஆஷ்லே பார்டி, வேறு எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. அந்தப் போட்டியில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பியன் ஆன முதல் அவுஸ்ரேலியர் என்ற பெருமையை அப்போது பெற்றிருந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு தொழில்முறை டென்னிஸ் விளையாடத் தொடங்கியது முதல் டூவர் நிலையிலான போட்டிகளில் இதுவரை ஒற்றையர் பிரிவில் 15, இரட்டையர் பிரிவில் 12 என 27 பட்டங்கள் வென்றுள்ளார்.

டென்னிஸ் விளையாட்டில் இருக்கும் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில், 3இல் பட்டம் வென்றுள்ளார்.

2019ஆம் ஆண்டு பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலும், 2021ஆம் ஆண்டு விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரிலும், 2022ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதுவரை ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் மட்டும்தான் சம்பியன் பட்டம் வென்றதில்லை. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் அதிகபட்சமாக 2018, 2019ஆம் ஆண்டுகளில் நான்காவது சுற்றுவரை முன்னேறியிருக்கின்றார்.

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையாக 121 வாரங்கள் இருந்திருக்கும் ஆஷ்லே பார்டி, அதில் 114 வாரங்கள் தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்திருந்தார்.

அவரது ஓய்வு அறிவிப்பின் மூலம், உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையாக இருக்கும்போதே ஓய்வை அறிவித்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை ஆஷ்லே பார்டி, பெற்றார்.

முன்னதாக பெல்ஜிய வீராங்கனை ஜஸ்டின் ஹெனின் கடந்த 2008ஆம் ஆண்டு இவ்வாறு உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையாக இருந்தபோது ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பரில், கோல்ஃப் விளையாட்டு பயிற்சியாளரான கேரி கிஸ்ஸிக்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதை ஆஷ்லே பார்டி, அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Related

Tags: அவுஸ்ரேலியாஆஷ்லே பார்டிஉலகின் முதல்நிலை வீராங்கனைஓய்வு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

O/L பரீட்சையில் மாற்றமில்லை – திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிப்பு!

Next Post

கணவனாக இருந்தாலும் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினால் அது பலாத்காரமே!

Related Posts

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!
கிரிக்கெட்

LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

2026-05-06
சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!
ஆசிரியர் தெரிவு

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

2026-05-06
கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

2026-04-29
Next Post
ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,000 முறைப்பாடு!

கணவனாக இருந்தாலும் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினால் அது பலாத்காரமே!

கிழக்கு ஐரோப்பாவுக்கு மேலும் துருப்புக்களை அனுப்ப நேட்டோ ஒப்புதல்!

கிழக்கு ஐரோப்பாவுக்கு மேலும் துருப்புக்களை அனுப்ப நேட்டோ ஒப்புதல்!

அனல்மின் நிலையத்தின் நான்கு யுனிட்களில் உற்பத்தி நிறுத்தம்

அனல்மின் நிலையத்தின் நான்கு யுனிட்களில் உற்பத்தி நிறுத்தம்

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.