நாட்டில் இன்றும்(வெள்ளிக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியினுள் 3 மணிநேரமும் 20 நிமிடமும், மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணி நேரமும் 40 நிமிடமும் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், P முதல் W வரையான வலயங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணிநேரமும் 30 நிமிடங்களும், மாலை 5.30 முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 50 நிமிடமும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.