நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பில், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை கழகம் தவிர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளன.
இதன்போது தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு குறித்தே அதிக அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட சந்திப்பு, கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்தது.
எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, குறித்த தினத்தில் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அந்த சந்திப்பு இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.