உய்குர்களை தங்கள் இன மற்றும் கலாசார அடையாளங்களை விட்டுக்கொடுக்கவும், சீன கலாசாரத்தை மேம்படுத்தவும் ‘கலாசார போஷாக்கு’ என்ற கருத்தை ஊக்குவிக்குவிப்பதற்கு உய்குர் மொழி பேசும் அரசு அதிகாரிகள் மற்றும் பிற நபர்களை சீன அரசாங்கம் பயன்படுத்துகிறது.
இந்த வாரம் தேசிய மக்கள் காங்கிரஸ் மற்றும் அதன் ஆலோசனை அமைப்பான சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் அமர்வுகளில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆற்றிய உரையில் இது பிரதிபலித்ததுள்ளது.
‘கலாசார போஷாக்கு’ மற்றும் ‘ஒட்டுமொத்த சீன தேசத்தின் நனவு’ உட்பட – ஓi பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் முழக்கங்கள் – ஷின் ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தின் அரசாங்க சார்பு பிரதிநிதிகளால் உடனடியாக ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.
உய்குர் இன நடனக் கலைஞரான தில்னார் அப்துல்லா, சீன அதிகாரிகளால் ‘சீன தேசத்தின் ஒற்றுமையின் நனவை’ மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறார். ஷின்ஜியாங்கில் உள்ள பள்ளிக் கல்வியில் சீன கலாசாரத்தை ஒருங்கிணைக்க அவர் பணியாற்றுகிறார்.
இது ஷின்ஜியாங்கில் சீனக் கலாசாரத்தைத் தழுவுவதை ஊக்குவிக்க சீன அரசாங்கம் பயன்படுத்திய வழக்கமான தந்திரமாகும்.
உலக உய்குர் காங்கிரஸின் நிர்வாகக் குழுவின் அமெரிக்காவை தளமாகக் கொண்ட துணைத் தலைவரான இல்ஷாட் ஹசன் கோக்போரின் அறிக்கைகளும் இதே விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
‘சீன அரசாங்கம் கலாசரங்களைப் பயன்படுத்தி இன ஒற்றுமையை வென்றெடுக்கிறார்கள்,’ என அவர் கூறியுள்ளதோடு அவர்கள் கலாசார ஊட்டச்சத்து என்று அழைப்பது சீன கலாசாரத்தின் மூலம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் செயற்பாட்டையாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில உய்குர்கள் சீன ஆட்சியின் கைப்பாவையாகவும், சீன அரசாங்கத்தின் ஊதுகுழலாகவும் மாறிவிட்டனர்.
அவர்கள் சீனாவின் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றார்கள் என்று கோக்போர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக, சீன அதிகாரிகள் ஷின்ஜியாங்கில் உள்ள உய்குர்களையும் பிற துருக்கிய சிறுபான்மையினரையும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்துள்ளனர்,
உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் அவர்களின் மத நடைமுறைகள் மற்றும் கலாசாரத்தின் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் சட்டமன்றங்கள் இனப்படுகொலை என கூறுகின்றன.