சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
குறித்த தகவல்களை குற்றவாளிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டுக்கு முன்னரோ அல்லது புத்தாண்டின் போதோ பயணங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பதிவிடுவதால் சமூக வலைத்தளங்களில், நட்பு பட்டியலில் உள்ள சிலரால் குறித்த தரவுகள் பெறப்பட்டு தங்களது வீட்டில் கொள்ளையிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.