புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், 37 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் இன்று(திங்கட்கிழமை) நாட்டினை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் சில பகுதிகளில் எரிபொருளினை பெற்றுகொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமையினை அவதானிக்க முடிந்தது.
கொழும்பிற்கு வெளியே உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, இன்று சந்தைக்கு 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.