நாட்டில் நாளையும்(செவ்வாய்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களில் காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதிக்குள் 5 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத்தடைஅமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் P முதல் W வரையான வலயங்களில் காலை 08.30 முதல் மாலை 06.30 வரையான காலப்பகுதிக்குள் 5 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.