இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.
மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
அத்துடன், மலையகத்துக்கான இந்தியாவின் உதவித் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.