ரஷ்ய மற்றும் உக்ரைனிய தூதுக்குழுக்களுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
இஸ்தான்புல்லில் உள்ள போஸ்பரஸ் நதிக்கரையில் உள்ள டோல்மாபாஸ் ஜனாதிபதி மாளிகையில் சற்று முன்னர் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி எர்டோகன், இருநாடுகளுக்கிடையிலான மோதல் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.
அத்துடன், இரு நாடுகளுக்கிடையில் துருக்கி மத்தியஸ்தம் செய்யவது கடமை எனக் கூறினார். மேலும், இந்த சோகத்தை தடுத்து நிறுத்துவது இரு தரப்பினரின் கைகளிலும் உள்ளது என தெரிவித்தார்.
துருக்கி நேட்டோ உறுப்பினராக இருந்தாலும் ரஷ்யாவுடன் வலுவான உறவுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அத்துடன், மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளில் சேருவதையும் துருக்கி எதிர்த்தது.