அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 600 கொள்கலன்கள் தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி, சீனி, மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுகளே இவ்வாறு தேங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பருப்பு மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.