டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வைட்ஹாலில் நடந்ததாக கூறப்படும் விருந்துகளில் கலந்துக்கொண்டு முடக்கநிலை விதிகளை மீறியதாக இரண்டாவது அமைச்சரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
துணைப் பிரதமரும் நீதித்துறை செயலாளருமான டொமினிக் ராப் இந்த குற்றச்சாட்டை ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த நிலையில், தற்போது சர்வதேச வர்த்தக செயலாளர் ஆன்-மேரி ட்ரெவெலியன் ஒப்புக்கொண்டார்.
எனினும், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.
இந்த வார தொடக்கத்தில், 2020ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கட்சிகள் மீதான விசாரணையின் விளைவாக விருந்துகளில் கலந்து கொண்டவர்களுக்கு 20 அபராதங்களை பெருநகர பொலிஸ்துறை வழங்கியது.
ஆனால், தண்டனையை எதிர்கொள்ளும் நபர்களின் பெயரையோ அல்லது அவர்கள் எந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள் என்பதையோ பெருநகர பொலிஸ்துறை வெளிப்படுத்தவில்லை.
ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் ஹில்மேன்’ என்று பெயரிடப்பட்ட விசாரணை தொடர்பான முறையான சட்ட கேள்வித்தாள்கள் அனுப்பப்பட்ட 100 பேரில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் ஒருவர்.