போராட்டம் காரணமாக ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டம் காரணமாக ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள பகுதியில் மின்சாரம் துண்டிப்பு – இணையச்சேவையும் முடக்கம்?
ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இணையச்சேவையும் முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
UPDATE ஜனாதிபதியின் வீட்டினை முற்றுகையிட்ட மக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம்!
ஜனாதிபதியின் வீட்டினை முற்றுகையிட்ட மக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்காரணமாக குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்தை சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பெங்கிரிவத்த இல்ல வீதியை சுற்றிவளைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் காணப்படும் நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.