ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிச் சென்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கான கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்தது.
இந்தநிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த சிலர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது தொடர்பாக கலந்துரையாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.