நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்று இடம்பெறும் விவாதத்தின்போதே எதிர்க்கட்சி பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்தார்.