மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியதும் அவர் கடமைகளை பொறுப்பேற்பார் என்றும் அலி சப்ரி தெரிவித்தார்.
நந்தலால் வீரசிங்க முன்னர் 2011 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநராக பணியாற்றியுள்ளார்.
அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் உதவியை எதிர்பார்த்திருக்கும் சூழலில் இந்த நியமனம் இடம்பெறவுள்ளது.