வவுனியா சதொசவில் பொருட்களை வாங்க வந்த மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இன்று (சனிக்கிழமை ) ஏற்பட்டிருந்தது.
சதொசவில் 1950 ரூபா பெறுமதியில் அரிசி, சீனி, பால்மா பற்கற், தேயிலைப்பக்கற் போன்ற பொருட்கள் வழங்கப்படுவதாக மக்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று காலை முதல் மக்கள் வரிசை ஏற்ப்பட்டிருந்து .
இந்நிலையில் சுமார் 100 பேர் வரையில் வயோதிபர்கள் கைக்குழந்தைகளுடன் தாய்மார் என பலரும் காத்திருந்த நிலையில் பொருட்கள் வழங்குவதற்கு தமது கணனியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் பொருட்களை வழங்க முடியாதுள்ளதாகவும் ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டது .
இதனால் காத்திருந்த மக்கள் முரண்பட தொடங்கிய நிலையில் பொலிஸார் வருகை தந்து பொருட்களை வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு சதொச ஊழியர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.