உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரத்தில், ரஷ்ய இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளைத் தொடர்ந்து, விபரங்களைச் சரிபார்க்க பிரித்தானியா அவசரமாகச் செயற்பட்டு வருகிறது என்று வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் கூறியுள்ளார்.
மரியுபோலில் எந்த உறுதிப்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது போரின் கடுமையான விரிவாக்கம் என்று லிஸ் டிரஸ் கூறினார்.
உக்ரைனின் ஜனாதிபதியான வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, தனது இரவு நேர காணொளி உரையைப் பயன்படுத்தி ரஷ்யா அத்தகைய சட்டவிரோத ஆயுதங்களை நிலைநிறுத்தலாம் என்று எச்சரித்தார். ஆனால் அவர்கள் ஏற்கனவே அவ்வாறு செய்ததாக அவர் கூறவில்லை.
நாங்கள் இதை மிகுந்த தீவிரத்துடன் கண்காணித்து வருகின்றோம் என்று அவர் கூறினார்.