பிலிப்பைன்ஸில் மெகி புயல் தாக்கியதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 25பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க மீட்புக் குழுவினர் இன்றும் (செவ்வாய்க்கிழமை) போராடிக் கொண்டிருக்கின்றனர்.
உள்நாட்டில் மெகி – அகடன் என்று அறியப்படும் புயல், நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) மணிக்கு 65 கிமீ (40 மைல்) வேகத்தில் காற்றுடன் தீவுக்கூட்டத்தைத் தாக்கியது.
புயல் கிழக்கு கடற்கரையை தாக்கியதால் 13,000க்கும் மேற்பட்ட மக்கள் உயரமான பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.
கனமழை மற்றும் காற்றினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, வீடுகள் மற்றும் வயல்களில் வெள்ளம் புகுந்தது மற்றும் கிராமங்களில் சேறும் சகதியுமாக உள்ளது.
இந்த ஆண்டின் முதல் புயல் இதுவாகும். பிலிப்பைன்ஸ் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 புயல்களைப் எதிர்கொள்கின்றது.