ரஷ்யாவுடனான சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் கடந்த மாதம் கடுமையாக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
மார்ச் மாதத்தில் ரஷ்யாவுடனான ஒட்டுமொத்தமாக 11.67 பில்லியன் டொலர் வர்த்தகத்தை சீனா மேற்கொண்டுள்ளதாக சீன சுங்கத் திணைக்கள தரவு காட்டுகிறது.
சீனாவிற்கு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் விவசாயப் பொருட்களின் முக்கிய ஆதாரமாக ரஷ்யா உள்ளது.
இந்நிலையில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான மேற்குலக நாடுகளின் தடைகளை பலமுறை தொடர்ந்தும் சீனா விமர்சித்து வருகின்றது.
மேலும் குறித்த படையெடுப்பு தொடங்குவதற்கு முன்னர், சீனாவும் ரஷ்யாவும் வரம்பற்ற நட்பு ரீதியிலான இருநாட்டு உறவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.