இந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் சில அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உரிய வகையில் விநியோகிப்பதை உறுதிப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக மருந்து பொருட்கள் கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலைமை காணப்பட்டதாகவும், அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், உலக வங்கியினால் மருந்து கொள்வனவுக்காக 10 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அது மாத்திரமின்றி, மருந்து விநியோகத்திற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரிவு மற்றும், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் சுகாதார அமைச்சு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக ஏழு நாடுகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கபட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழிநுட்ப பிரிவின் பணிப்பாளர் அன்வர் அம்தானி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் இவ்வாறு பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நாடுகளிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைக்கப்பபெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்திய கடன் உதவியின் அடிப்படையில் நாட்டுக்கு மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.