எதிர்க்கட்சியின் கூச்சல் குழப்பத்தை அடுத்து நாடாளுமன்ற அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பாதக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நாடாளுமன்றில் உரையாற்றியபோது எதிர்கட்சியுடன் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதனை அடுத்தே சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பாதக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாந்த பண்டார இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.