உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவின் நிலை குறித்து அமெரிக்கா சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா 25வீத படைகளை இழந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பலம் குறைந்து வருகிறதென்றும் இந்த சமயத்தில் உக்ரைனுக்கு தேவையான இராணுவ உதவிகளை அனுப்பிவைப்போம் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
அதேசமயம் உக்ரைனின் மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா, இன்றைக்குள் உக்ரைன் படைகள் சரணடையாவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.