உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யா மீது அடுத்தக்கட்ட பொருளாதார தடைகள் பலப்படுத்தப்படும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளை விதிப்பது பற்றி அமெரிக்கா மற்றும் முக்கியமான ஐரோப்பிய நாடுகள் இடையே விவாதிக்கப்பட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் பலப்படுத்தப்படும் எனவும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் கிளமெண்ட் பியுன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கட்டுப்பாடுகள், எரிசக்தி வளங்களை அதிலும் குறிப்பாக எண்ணெய் வளத்தை பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.