நாடளாவிய ரீதியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோ கிப்பதற்கு இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.