யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட சிறிய ரக லொறி விபத்துக்குள்ளாயியதில் வாகனத்தில் பனித்த மூவரில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியங்கும் சமிக்கை மூலம் இயங்கும் தண்டவாள பகுதியினை கடக்க முற்பட்ட வேளையிலே இவ் விபத்து இடம் பெற்றது. இந் நிலையில் புகையிரத கடவைக்கு ஒரு காவலாளியை நியமிக்க வேண்டும் என பிரதேச மக்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது தண்டவாளத்தின் மேலே மரக்குற்றிகளை போட்டும் ரயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ் கொடிகாமம் பொலிஸார் மக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி புகையிரத கடவைக்கு காவளாளி நியமிக்கும் வரை பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள் என எழுத்து மூலம் சாவகச்சேரி, கொடிகாமம், கோப்பாய் உதவி பொலிஸ் அத்தியட்சகர் A.G y.s கீர்த்திசிங்க மக்களிடம் கையளித பிற்பாடு போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.