ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (புதன்கிழமை) 19ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கோட்டாகோகம என பெயரிடப்பட்டுள்ள பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இதனிடையே, மக்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையின் மற்றுமொரு கட்டத்தை அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகம என்ற பெயரில் ஆரம்பித்துள்ளனர்.