தமிழகத்திற்கு 26 கோடி கிலோ நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களாக நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், கூடுதலான நிலக்கரி ஒதுக்கீடு செய்யுமாறு மின் வாரியம் வலியுறுத்தியிருந்தது.
இதற்கமைய தற்போது மத்திய அரசு 26 கோடி கிலோ நிலக்கரியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலக்கரியை தமிழக மின் வாரியம் சொந்த செலவில் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.