ஐ.பி.எல். ரி-20 தொடரின் 40ஆவது லீக் போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் டைடன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அபிஷேக் ஷர்மா 65 ஓட்டங்களையும் மார்கிரம் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் யாஷ் தயால் மற்றும் அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 196 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், குஜராத் டைடன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விருத்திமான் சஹா 68 ஓட்டங்களையும் ராகுல் டிவெட்டியா ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், உம்ரான் மாலிக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய உம்ரான் மாலிக் தெரிவுசெய்யப்பட்டார்.