ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
உத்தரவு கிடைக்கப்பெற்ற பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு நேற்று(புதன்கிழமை) பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக கைது செய்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.